
ஷா ஆலாம், ஜூலை.11 – அம்னோ இடைத்தேர்தலில் சுங்கை கண்டிஸ் மாநில சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் தேசிய முன்னணி சின்னத்தை உபயோகிக்காமல் முதன் முறையாக அக்கட்சி சின்னத்தையே உபயோகிக்க சிலாங்கூர் அம்னோ பிரிவு சம்மதம் தெரிவித்துள்ளது.
அது குறித்து நேற்று இரவு டான்ஸ்ரீ நோ ஓமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் அம்னோ பிரிவின் தொடர்புக்குழு துணைத் தலைவர் மாட் நசாரி தெரிவித்தார்.
“அம்னோ இடைத்தேர்தலில் சுங்கை கண்டிஸ் தொகுதியில் எங்களின் வேட்பாளரை களம் நிறுத்த அக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதோடு, அத்தேர்தலில் எங்களது கட்சி சின்னத்தையே உபயோகிக்க சிலாங்கூர் அம்னோ பிரிவு பரிந்துரை செய்தது,” என அவர் கூறினார்.