Latestமலேசியா

டோம்மிக்கு மலாய் கற்றுக் கொடுக்க எனது மகன் தயார் – டான்ஶ்ரீ கூ கேய் கிம்

கோலாலம்பூர், ஜூலை.11- அட்டர்னி ஜெனரல் டோம்மி தோமஸ் தமது மலாய் மொழிப் புலமையை மேம்படுத்திக்கொள்ள உதவ தமது மகன் எடின் கூ தயாராக இருப்பதாக, நாட்டின் பிரபல வரலாற்றுப் பாட நிறைநிலை பேராசிரியர் டான்ஶ்ரீ கூ கேய் கிம் தெரிவித்துள்ளார். டான்ஶ்ரீ கூ கேய், டோம்மியின் நல்ல தோழர் ஆவார்.

எடின் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளர் என்றும் ‘புசாக்கா’ எனும் பாரம்பரிய கலை, கலாசார பராமரிப்பு அமைப்பின் தோற்றுநரும் ஆவார்.

கடந்த ஜூன் மாதம், அட்டர்னி ஜெனரலாகப் பொறுப்பு ஏற்கும்போதே தமக்கு மலாய் மொழி சரியாகத் தெரியாது என்று ஒப்புக் கொண்ட டோம்மி, அதனைச் சரிசெய்து கொள்வார் என்றும் உறுதித் தந்திருந்தார்.

சென்ற வாரம் நஜிப் வழக்கின்போது விசாரணையை ஆங்கிலத்தில் மேற்கொள்ள டோம்மி கோரியதை அடுத்து கடும் விமர்சனத்திற்கு அவர் ஆளாகினார். 42 ஆண்டுகளாக தனியார் துறையில் அதிகம் ஆங்கிலம் பேசுவோருடன் பணிப் புரிந்ததால், மலாயில் பேசும் வாய்ப்பு தமக்கு கிடைக்கவில்லையென டோம்மி விவரித்திருந்தபோதும், அந்த விளக்கத்தை சில தரப்புகள் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker