Latestமலேசியா

தாதா ஸாகிருக்கு ‘VVIP’ உபசரிப்பா? – சட்டத் துறை விரிவுரையாளர் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை.11- இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஸாகிர் நாய்க்கும், பிரதமர் துன் மகாதீரும் சந்தித்து கொண்டதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சட்டத் துறை விரிவுரையாளர் ஷாம்ஸேர் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு தாதாவுக்கு ‘VVIP’ உபசரிப்பு தந்தது சரியா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஸாகிர் தீவிரவாதி என்கிறார்கள். அவருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள். அவருடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இல்லை. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அவருடைய மகனின் வகுப்புக்கு கூட சென்றிருக்கின்றேன். இதுவெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை” என்ற ஷாம்ஸேர் சிங், ஆனால், இந்திய அரசால் தேடப்பட்டுவரும் ஸாகிரை அனுப்பாமல் அந்நாட்டின் சட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடுவது ஏன் என்றுதான் விளங்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியா சட்டபடி ஸாகிர் ஒரு குற்றவாளி. அதனால், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதுதானே முறை என்று ஷாம்ஸேர் சிங் கருத்துரைத்துள்ளார்.

இதனிடையே, முகமது நபியின் பிறந்தநாளை பற்றி ஹம்ஸா கஷ்காரி என்ற சவூதி அரேபிய எழுத்தாளர் டிவிட்டரில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து அவர் அந்நாட்டு போலீசாரால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, இண்டர்போல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை கைது செய்து அவருடையே நாட்டுக்கே திருப்பி அனுப்பியது மலேசிய அரசாங்கம்.

அப்படியிருக்கையில், ஸாகிர் நாய்க் விவகாரத்தில் மட்டும் ஏன் பாராபட்சம் பார்க்கப்படுகிறதென ஷாம்ஸேர் சிங் பக்காத்தான் அரசைக் கேள்விக் கேட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker