Latestமலேசியா

நூற்றாண்டின் மாபெரும் சந்திரக் கிரகணம்; மலேசியர்களும் காணலாம்

கோலாலம்பூர், ஜூலை.11 – இந்த நூற்றாண்டின் மிகக் கூடுதலான நேரம் நீடிக்க கூடிய சந்திரக் கிரகணத்தை மலேசியா மக்களும் கண்டு களிக்க இயலும். சந்திரன், செவ்வாய் கிரகம், மற்றும் பால்வீதி மண்டலம் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக காட்சித் தர கூடிய மிக அபூர்வமான விண்வெளி நிகழ்வாக இது திகழ்கிறது.

ஜூலை 28-ஆம் தேதி தோன்றவிருக்கும் இந்த சந்திரக் கிரகணம் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடிக்கும் என விண்வெளி ஆய்வாளர் ஷாரின் அகமட் தெரிவித்தார்.

இது மிக அபூர்வமான ஒரு தருணம். விண்வெளி புகைப்படக்காரர்களும் நட்சத்திர விரும்பிகளும் இந்த அபூர்வ தருணத்தை படம் பிடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 4 மணி நேரங்களுக்கு மேல் பூமியின் மறுபக்க நிழல் இருளை கடந்து சந்திரன் செல்லவிருக்கிறது. கிட்டத்தட்ட இந்தச் சந்திரக் கிரகணம் அதிகாலை 2.24 மணியில் இருந்து 6.19 மணி வரை இடம் பெறலாம்.

இருப்பினும், முழுமையான சந்திரக் கிரகணம் அதிகாலை மணி 3.30 முதல் 5.13 வரை மாபெரும் இரத்தச் சிவப்பில் காட்சித் தரும். அதே வேளையில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பிரகாசத்துடன் செவ்வாய் கிரகமும் காணப்படும்.

மலேசியாவில் முழு சந்திரக் கிரகணத்தைக் காண்பதற்கு உரிய இடமாக தீபகற்ப மலேசியா திகழ்கிறது. போர்னியோ தீவில் அதனிக் காண முடியாது. அதோடு, கிழக்குக் கரை மாநிலங்களில் இந்த அபூர்வ காட்சியை தெளிவாக காண முடியும் என்று ஷாரின் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker