Latestவிளையாட்டு

பிரான்ஸ் வெற்றி: குகைச் சிறுவர்களுக்கு சமர்ப்பித்தார் போக்பா

செய்ண்ட் பீட்டர்ஸ்பெர்க், ஜூலை.11- உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் பிரசித்திப் பெற்ற மத்திய திடல் ஆட்டக்காரரான போக்பா, அந்த வெற்றியை தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப் பட்ட சிறுவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றில், 1-0 என்ற புள்ளியில் பிரான்ஸ் பெல்ஜியத்தை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்கு தேர்வானது.

பிரான்ஸின் அந்த வெற்றியை, மென்சஸ்டர் யுனைடெட் கால்பந்து குழுவின் விளையாட்டளாரான போல் போக்பா, தாய்லாந்து குகை ஒன்றில் கடந்த 18 நாட்களாக சிக்கித் தவித்து, நேற்று மீட்கப் பட்ட தாய்லாந்து கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அர்ப்பணித்தார்.

“இந்த வெற்றி, தாய்லாந்து கால்பந்து அணிக்கு நான் சமர்ப்பிக்கின்றேன். உங்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்” என்று போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள மலைக் குகைக்கு கடந்த ஜூன் 23-ஆம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

18 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப் பட்ட அந்தச் சிறுவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, உடல்நலம் தேறி வருகின்றனர். அவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் ரஷ்ய, உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றை நேரில் காணும் வாய்ப்பை அவர்களுக்கு உலகக்கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ வழங்கினார்.

ஆனால், 15-ஆம் தேதிக்குள் அவர்கள் முழுமையாக தேறும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், அவர்கள் மாஸ்கோவிற்கு பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker