Latestசினிமா

புற்றுநோயுடன் போராடி மீண்ட கதாநாயகிகள்!

சென்னை, ஜூலை.11- புற்றுநோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்ற நிலையில் இந்நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கதாநாயகிகள் பலர் உள்ளனர். சினிமா பிரபலங்கள் கடும் நோய்த் தாக்கத்திற்கான சிறந்த விழிப்புணர்வு வழிகாட்டிகளாக கருதப்படுகிறார்கள்.

மம்தா மோகன்தாஸ்:- மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் தமிழில் “சிலப்பதிகாரம்” உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அப்போது மனரீதியாகவும் -உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட மம்தா அந்நோயுடன் போராடி மீண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

நடிகை கவுதமி:- நடிகை கவுதமியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவர் புற்றுநோயிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

மனீஷா கொய்ராலா:- “பம்பாய், இந்தியன் , முதல்வன், பாபா” போன்ற படங்களில் நடிகை மனீஷா கொய்ராலா நடித்துள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென மயங்கி விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து மனீஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
அதன் பின்னர் அவர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.

லிசா-ரே:- தமிழில் “நேதாஜி” என்ற படத்தில் நடித்த லிசா ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அதற்கான உரிய சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

சோனாலி பிந்த்ரே:- “காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம்” போன்ற தமிழ் படங்களில் நடித்த இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்துள்ளார். அதிலிருந்து மீள்வேன் என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker