Latestமலேசியா

மஇகா தேசியத் தலைவர் தேர்தல் : வேட்புமனு ஜூலை 14-இல்!

கோலாலம்பூர்,ஜூலை.11- மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் வரும் ஜூலை 14-ஆம் தேதி இடம்பெறவிருக்கிறது.

எதிர்வரும் சனிக்கிழமை 14-ஆம் தேதி காலை 10 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கோலாலம்பூர் மஇகா தலைமையகத்தில் முதலாவது மாடியில் அமைந்துள்ள மாநாட்டு அறையில் வேட்புமனுத் தாக்கல் இடம்பெரறவிருக்கிறது என மஇகாவின் தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், நடப்புத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது. எனினும், அவர் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்களில் சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker