Latestமலேசியா

மகளுக்கு புற்றுநோய்; சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியவில்லை – நஜிப் வருத்தம்

கோலாலம்பூர், ஜூலை.11- தமது மகள் புத்ரி நோர்லிஸா நான்காம் கட்ட இரத்த புற்றுநோயால் அவதியுற்றுவரும் நிலையில், குடும்பத்தார் அனைவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதால் அவரது கிமியோ சிகிச்சைக்கான பணத்தைக் கூட செலுத்த இயலவில்லையென முன்னாள் பிரதமர் நஜிப் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமது விவகாரத்தில் பக்காத்தான் அரசு அநியாயமாக நடந்து கொள்வதாக அவர் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

36 வயது நோர்லிஸா, நஜிப்பின் முதலாவது துணைவியார் புத்ரி ஸாய்னா தெங்கு இஸ்காண்டாருக்கு பிறந்தவர் ஆவார். நோர்லிஸாவுக்கு 6 மாதத்திற்கு கிமியோ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான பணத்தை எவ்வாறு செலுத்துவது என்று தெரியவில்லை என நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நோர்லிஸாவின் சிகிச்சைக்கு கட்டணம் செலுத்துவதற்கு தாம் அளித்த காசோலையை வங்கி நிராகரித்துவிட்டதாகக் கூறி, அந்த காசோலைப் படத்தை நஜிப் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

எனினும், இனி தமது பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளை அரசாங்கம் முடக்க முடியாது என்பது இன்று தமக்கு தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார். அப்படியானால், இதற்கு முன் தமது பிள்ளைகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அடிப்படையற்றதுதானே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker