Latestமலேசியா

மகாதீருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு

கோலாலம்பூர், ஜூலை.11 – நேற்று தனது 93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரதமர் துன் மகாதீருக்கு மலேசியாவுக்கான கனடடிய உயர் ஆணையம் புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது  11 வயதில் துன் மகாதீருடன் கைக்குலுக்குவது போன்ற ஒரு புகைப்படம் தான் அது. 1982-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை மகாதீர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அவரின் தந்தையும் அப்போதைய கனடா பிரதமருமான பியேர் துரூடோவும் உடனிருந்தார். அதோடு, மகாதீருடன் காலஞ்சென்ற துன் கசாலி ஷாபியும் டான்ஸ்ரீ டாக்டர் சுலாய்மான் டாவுட்டும் உடனிருந்ததையும் அப்புகைப்படத்தில் காண முடிகிறது.

மேலும், மகாதீரின் டிவிட்டர் பதிவின்படி மலேசியா-கனடாவின் 22-ஆவது உயர் ஆணையாளர் ஜூலியா பென்ட்லி அந்தப் புகைப்படத்தை கனடா உயர் ஆணையம் சார்பாக அவருக்கு வழங்கினார்.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஜூலியா பென்ட்லி மகாதீரை புத்ராஜெயாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அந்தப் புகைப்படம்,  இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே உள்ள நினைவலைகளை மீண்டும் ஊஞ்சலாடச் செய்யும் என்றால் அது மிகையாகாது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker