Latestமலேசியா

‘மூசாங் கிங்’ விலை படுவீழ்ச்சி! 50% கழிவு!

குவா மூசாங், ஜூலை.11 – சந்தையில் ‘மூசாங் கிங்’ டுரியான் பழங்களுக்கு பஞ்சமில்லாமல் போனதால், இம்மாதம் தொடக்கத்தில் இருந்த அதன் விலை 50 விழுக்காடு சரிவு கண்டது. வழக்கமாக ஒரு கிலோகிராமுக்கு 60 ரிங்கிட் விற்கப்படும் மூசாங் கிங், தற்போது 20-லிருந்து 30 ரிங்கிட்டு பாதிக்குப் பாதி குறைவான விலையில் கிடைக்கிறது. 

கிளாந்தான் மட்டுமல்லாது பகாங்கிலும் இவ்வகை டுரியான்களின் விலை சரிவு கண்டுள்ளதாக டுரியான் பழத்தோட்ட உரிமையாளரான 50 வயது சோங் யோக் போன் என்பவர் தெரிவித்தார்.

அதோடு, மற்ற வகை டுரியான்களைக் காட்டிலும் மூசாங் கிங்கை அதிகமானோர் வாங்குவதில்லை. அதனாலேயே அதன் விலை அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கம்போங் பூலாயில், 20 ஏக்கத்தில் டுரியான் பழததோட்டத்தை வைத்திருக்கிறார்.
அவரது தோட்டத்திலிருந்து கிடைக்கப் பெறும் பெரும்பாலான பழங்கள் சிங்கப்பூர்,ஹாங் காங், சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker