Latestஉலகம்

பல கொலைகளுக்கு ‘வாட்ஸ்-அப்’ தான் காரணமா?

புதுடில்லி, ஜூலை, 11- அண்மையில் காலமாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளைக் கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலர் அடித்துக் கொலை செய்யப் படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வாட்ஸ்-அப் மூலம் பகிரப்படும் வதந்திகளே என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அதிகமான வதந்திகள் பகிரப்படுவதை தடுக்கும் விதமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு சில தினங்களுக்கு முன்னதாக வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.

அதில் கொலைகள் நடக்க காரணமான வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ்- அப் நிர்வாகம் தட்டிக் கழிக்க முடியாது எனத் தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பியிருந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக வாட்ஸ்- அப் நிறுவனம் 10 வித அறிவுறுத்தல்களுடன் ஒரு பக்க அளவில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஒரு தகவலை பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை உணர்தல் வேண்டும். தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. பிரபல வார்த்தைகளால் பிரசுரிக்கப்படும் ‘லிங்க்’ எழுத்துகளை சரிபார்த்தல் வேண்டும் என்றும் வாட்ஸ் -அப் நிறுவனம் அறிவுறுத்தியது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker