Latestமலேசியா

அடுத்த 6 மாதம் வீட்டு மின் கட்டணம் உயராது! -அமைச்சர்

கோலாலம்பூர், ஜூலை.12- வீட்டு உபயோக மின் கட்டணங்களுக்கு மானியம் அரசாங்கம் வழங்கியுள்ளதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு வீட்டு உபயோக மின் கட்டணங்கள் உயர்த்தப் படாது என்று எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல் ப்ருவநிலை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ இன் கூறினார்.

“அரசாங்கம் மின் கட்டணத்திற்கு ரிம.114 மில்லியன் மானியம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், மின் கட்டணம் உயர்த்தப் பட்டாலும், 81.7 விழுக்காடு வீட்டு மின் கட்டண உபயோகிப்பாளர்கள், அதிகரிக்கப் பட்ட கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை” என்று அவர் தெரிவித்தார்.

“உங்களின் மின் கட்டண ரசீதில், கூடுதல் மின் உபயோகத்திற்கான கட்டணம் பூஜியம் என்று குறிப்பிடப் பட்டிருந்தால், அரசாங்கம் அந்தக் கூடுதல் மின் உபயோகத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டது என்று அர்த்தப்படும்” என்ற்ய் இயோ சொன்னார்.

வாழ்க்கைச் செலவீனங்களை குறைப்போம் என்று பக்காத்தான் ஹராப்பான் வாக்களித்த வேளையில், மின் கட்டணம் அதிகரிக்கப் பட்டால், அது பக்காத்தான் கூட்டணியின் வாக்குறுதிக்கு எதிராக அமைவது போல் பொருள் படும் என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபீஸி ரம்லி அண்மையில் கூறியிருந்தார்.

ரபீஸியின் கருத்தில் உண்மையில்லை என்றும், இந்த மின் கட்டண அதிகரிப்பால், வீட்டு மின் கட்டண உபயோகிப்பாளர்களுக்கு எவ்வித பாதகமும் நேராது என்று இயோ பதிலளித்தார்.

“உணவக கடைகளில், மின் கட்டணம் அதிகரித்ததால், உணவுகளின் விலைகள் அதிகரிக்கின்றது என்று கூறப்பட்டால், அது குறித்து உடனடியாக உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, மற்றும் நுகர்வோர் அமைச்சிடம் புகார் கொடுங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.

அரசாங்கத்தால் கொடுக்கப் பட்டுள்ள அந்த மானியம், ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை, கூடுதல் மின் கட்டணச் செலவுக்காக பயன்படுத்தப் படும் என்று அவர் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker