Latestஉலகம்

அமெரிக்கா-சீனா மோதல்: “திருட்டு சீனா” என டிரம்ப் சாடல்!

வாஷிங்டன். ஜூலை 12- அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடி அதை தனது உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது என்று குற்றச்சாட்டியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 34 பில்லியன் டாலர்களை வரியாக விதித்து வருகிறது. இந்த வரி விதிப்பை 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப திட்டமிட்டுள்ளதால் இரு நாடுகள் நடுவே பொருளாதார போர் ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் அரசு, சீனா மீதான பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25% வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதற்குப் பதிலடியாக உடனடியாக சுமார் அதே அளவு அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது சீனா.

இப்படி இரு வல்லரசுகள் பொருளாதார மோதலில் இறங்கியுள்ள நிலையில் சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பொருட்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கார்கள் மற்றும் முக்கியமான விவசாய பொருட்களான சோயாபீன்ஸ் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் மீதான வரியை அதிகரித்து இருந்தது சீனா.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker