Latestசினிமா

முருகதாஸ் மீது ஶ்ரீரெட்டி, கொளுத்திப் போட்ட பட்டாசு!

ஐதராபாத், ஜூலை.12- தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் மீது பட்டாசை கொளுத்தி போட்டது போல பழியைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் தெலுங்கு திரையுலக அதிரடிக் குற்றச்சாட்டுக்களால் கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி..

“பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்” என நடிகை ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு தெலுங்கு சினிமாவில் காட்டுத் தீயாய் பரவி பலரை
சுட்டெரிக்க வைத்தது.

அணமையில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு. மிகப் பெரிய இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புத் தருவதாக கூறி
என்னை பயன்படுத்திக் கொண்டார். நேரம் வரும் போது கண்டிப்பாக பெயரைச் சொல்வேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி, ! தனது பேஸ்புக்கில், “தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கீங்க, கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா..? வெள்ளி கொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் நிறைவேற்றவில்லை. அங்கு நாம் நிறைய …? நீங்கள் நல்ல மனிதர்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஸ்ரீரெட்டியின் இந்தப் பதிவுத் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முருகதாஸ் தற்போது விஜய்யின் ‘சர்கார்’ படத்தை இயக்கி வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker