Latestமலேசியா

ஈப்போ-ஜொகூர் பாரு ஏர்ஆசியா விமானச் சேவை

சிப்பாங், ஜூலை.12 – குறைந்த விலை விமான சேவையை வழங்கி வரும் நிறுவனமான ஏர்ஏசியா தனது விமானச் சேவையை பேராக், ஈப்போவிற்கும் கொண்டுச் செல்கிறது. அந்த வகையில், ஈப்போ – ஜொகூர் பாரு வழி விமானச் சேவையை ஏர்ஏசியா அறிமுகப்படுத்தவுள்ளது.

ஈப்போ – ஜொகூர் பாரு விமானச் சேவையை ஆரம்பிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாக ஏர்ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மாட் கூறினார்.

“ஜொகூரிலிருந்து எங்களது முதல் விமானம் ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையம் வந்தடைவதைக் காண ஆர்வமாக உள்ளோம். இந்த வழி சேவையில் எங்களுக்கு கூடுதல் திட்டங்கள் உள்ளன. அது பற்றிய விவரங்களை விரைவில் பகிர்ந்துக் கொள்வோம்,” என அவர் தெரிவித்தார்.

பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவில் ஏர் ஆசியா மலேசியா தனது 16-ஆவது உள்நாட்டு வழி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. ஈப்போவையும் சேர்த்து ஏர் ஆசியா மலேசியாவில் ஒன்பது மாநிலங்களுக்கும் லபுவானுக்கும் தனது விமான சேவையை வழங்கி வருகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker