Latestமலேசியா

உச்ச நீதிபதி : மலான்ஜும் பதவி ஏற்றார்

கோலாலம்பூர், ஜூலை.12 – டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலான்ஜும் நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 65 வயதான அவர் நேற்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நிகழ்வில் மாமன்னர் 5ஆம் முகம்மட்டிடம் இருந்து தனது பதவி நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

அந்நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் முகமட், பிரதமர் அலுவலக அமைச்சர் டத்தோ லியோவ் வியுவ் கியோங், அட்டர்னி ஜெனரல் டோம்மி தோமஸ், அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்ஸா, கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் டத்தோஸ்ரீ லத்திபா முகமட் தாஹார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனிடையே, ரிச்சர்ட் மலான்ஜுமிற்கு நாட்டின் நீதித்துறையில் உயர்ந்த பதவியை வகிக்க எல்லா தகுதியும் உள்ளதாக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.

அதோடு, அவர் ரிச்சர்ட் மலான்ஜும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை கீழ்வருமாறு :

1) கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதிகளிலேயே ரிச்சர்ட் மலான்ஜும் தான் மிக மூத்த நீதிபதி

2) துன் அரிபின் சகாரியா போல் ரிச்சர்ட்டும் ஒரு சட்ட நிபுணர். அவரைப் பொறுத்தவரை அனைத்துமே சட்டத்திற்கு அப்பாற்பட்டது தான்

3) எதையும் திறமையாக நிர்வாகம் செய்யும் ஒருவர்

நாட்டின் மிக உயர்ந்த நீதிபதி பதவிக்கு போர்னியோ மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker