Latestஇந்தியா

‘என்னை கொன்று விட்டார்கள்’ -மனைவிடம் பேசிய கணவன் ஆவி!

படபலியா, ஜூலை.12- இந்தியாவில் உயிரிழந்த கணவன் ஒருவர் ஆவியாக வந்து தன் மனைவியிடம், தன்னை கொன்றவர்கள் குறித்து கூறியதாக தெரிய வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசாவில் படபலியா கிராமத்தைச் சேர்ந்த சுபோத் நாயக் என்பவர் கடந்த வாரம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக முடிவெடுத்து குடும்பத்தார் நாயக்கின் இறுதி சடங்கை செய்தார்கள். இந்நிலையில் ஒரு வாரம் கழித்து நாயக்கை அதே கிராமத்தை சேர்ந்த தபந்தாஸ் மற்றும் அவர் குடும்பத்தார் கொலை செய்து விட்டதாக நாயக்கின் குடும்பத்தினர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், நாயக்கின் மனைவியிடம் இறந்து போன அவர் கணவர் நாயக் ஆவியாக வந்து பேசி தான் கொல்லப்பட்ட விபரத்தை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசித்திர புகாரைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார், அறிவியல் குழு உதவியுடன் தங்களது விசாரணை தொடங்கியுள்ளனர்.
விசாரணைக்கு பின்னரே இது குறித்த உண்மை தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker