Latestமலேசியா

நேவி பயிற்சி மாணவர் சித்ரவதை செய்யப்பட்டாரா? நடந்தது என்ன?- குடும்பத்தார்

கோலாலம்பூர், ஜூலை.12- கடந்த மே 19-ஆம் தேதி உயிரிழந்த அரச மலேசிய கடற்படை பயிற்சி மாணவர் ஜே.சூசைமாணிக்கத்தின் மரணத்திற்கு பின்னணியில் உண்மை மறைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உண்மை என்ன என்றும் அவரது குடும்பத்தார் கேள்விக் கேட்டிருக்கின்றனர். பயிற்சியில் இணைவதற்கு முன் நன்றாக இருந்த மகனுக்கு எப்படி திடீரென நுரையீரலில் நீர் கோர்த்திருக்க முடியுமென அவர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏனெனில்,இறப்பதற்கு முன்னதாக சூசைமாணிக்கம் தான் சக மாணவர்களால் துன்புறுத்தப்படுவதாக அவரது சகோதரருக்கு வாட்ஸெப் செய்தி அனுப்பி இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுவதாக அவர்களின் வழக்கறிஞர்கள் என்.சுரேந்திரனும் லத்திப்பா கோயாவும் தெரிவித்தனர்.

அதற்கு ஆதாரமாக 27 வயது சூசைமாணிக்கத்தின் நெற்றிப் பகுதி வீங்கியது போல் இருக்கும் படத்தை வழக்கறிஞர்கள் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.

சூசைமாணிக்கம் இறந்த நாளன்று உடம்பு முடியாமல் இருந்ததாகவும், ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் சார்ல்ஸ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார்.மாறாக, பயிற்சியில் ஈடுபடுமாறு வற்புறுத்தபப்பட்டிருக்கிறார் சூசைமாணிக்கம். அதனால், அவர் மயங்கி விழுந்திருக்கிறார்.

அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே சூசைமாணிக்கத்தின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

“நான் தான் லுமுட்டுக்கு சூசையை ஏற்றிச் சென்றேன். பயிற்சிக்கு போய் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் என் தம்பி இறந்துவிட்டான்” என சார்ல்ஸ் கண்ணீருடன் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker