Latestமலேசியா

கிரேப் காரில் பெண் பலாத்காரம்; ஓட்டுநரை தாக்கினார் கணவர்

ஜாசின், ஜூலை.12- கிரேப் காரில் சென்ற தனது மனைவியை ஓட்டுநர் பலாத்காரம் செய்ததை அடுத்து சினமடைந்த கணவர், சம்பந்தப்பட்ட ஓட்டுநரைத் தாக்கி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மட்டுமில்லாமல் தன்னைத் தாக்கியதாக அந்த கிரேப் ஓட்டுநரும் போலிசில் புகார் செய்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில், மலாக்கா செண்ட்ரல் பேருந்து முனையத்திலிருந்து தாமான் கெசிடாங்கில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல கிரேப் கார் சேவையைப் பெற்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். அப்போது, களைப்பில் உறங்கிவிட்டவர் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, தான் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறார்.

பயத்தில் திரும்ப எதிர்த்து சண்டைக் கொடுக்காத அந்த பெண், உடனே தனது கணவருக்கு இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். தனது மனைவி வீடு வந்து சேர்வதற்குள் இரும்புத் தடியுடன் காத்திருந்த கணவர், கிரேப் கார் வந்ததும் அந்த ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.

கிரேப் ஓட்டுநரின் தலையிலும், வலக்கையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பெண்ணை பலாத்காரம் செய்த அந்த கிரேப் ஓட்டுநரும், ஓட்டுநரைத் தாக்கிய பெண்ணின் கணவரும் கைது செய்யப்பட்டனர். சிறுநீர் பரிசோதனையில், பெண்ணின் கணவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே மூன்று போதைப்பொருள் குற்றச்செயல்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker