Latestஉலகம்

குகைச் சிறுவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

பேங்காங், ஜூலை.12- தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் சுமார் 10.கி.மீ. நீளம் கொண்ட தாம் லுவாங் மலைக்குகைக்குள் ஜூன் 23 ஆம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பின் அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் 18 நாள்களுக்கு பின்னர் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு மருத்துவம் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அனைத்துச் சிறுவர்களும் உடல் எடை இழந்துள்ள நிலையில் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த பின்னர் வீட்டிலிருந்தவாறு இரு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker