Latestமலேசியா

சக ஊழியரைக் குத்திக் கொன்ற ஆடவன்!

பந்திங், ஜூலை.12 – சுல்தான் அப்துல் சமாட் தொழில்திறன் கல்லூரியில் ஆய்வுக் கூட உதவியாளர் ஒருவர் தனது சக ஊழியரான ஒரு பெண்மணியைக் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் நிகழ்ந்த அச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட 57 வயது பெண்மணி சைமா மாஹ்முட் கல்லூரி அலுவலக ஸ்டோர் அறையில் இறந்துக் கிடந்தார்.

அந்த பெண்மணியை கொலைச் செய்த ஆவடனே போலீசை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தகவல் அளித்ததாக, கோலா லாங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸான் துக்கிமான் கூறினார்.

“அழைப்பு கிடைத்தவுடன் நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அவ்விடத்தில் சந்தேக நபரும் கொலை செய்யப்பட்டவரும் மட்டுமே இருந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்மணியின் கழுத்திலும் இதர உடற்பாகங்களிலும் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன,” என  அசிஸான் தெரிவித்தார்.

தனித்து வாழும் தாய்மாரான கொலை செய்யப்பட்ட பெண்மணி, சம்பந்தப்பட்ட ஆடவனுக்கு அக்கல்லூரியில் மற்றொரு ஊழியருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக அப்பெண்மணி கேலி செய்து வந்துள்ளதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்தக் கல்லூரியில் மூன்று மாதமாக பணிபுரிந்து வரும் அந்த ஆடவன் மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு இதற்கு முன்னர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்தடைந்த போது அந்த ஆடவன் தான் கொலை செய்த பெண்ணின் சடலத்துக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தார் என அசிஸான் சொன்னார். போலீசார் இவ்வழக்கை குற்றவியல் சட்டப் பிரிவு  302- இன் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker