Latestமலேசியா

சொந்த சின்னத்தில் அம்னோ போட்டி; வாழ்த்துகள் என்கிறார் சுப்ரா

கோலாலம்பூர், ஜூலை.13- வருகின்ற சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடவிருக்கும் அம்னோ, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களைக் கவர தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம்.

அம்னோவின் இந்த முடிவில் மஇகா தலையிடாது என்றும் சொந்த கட்சியை வலுப்படுத்துவதும் வேலையே மஇகாவுக்குச் சரியாக இருக்கிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கை கண்டிசில் 70 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் என்பதால் அம்னோ இம்முடிவை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை. மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மீது அம்னோவுக்கு ஈடுபாடில்லை எனத் தெரிகிறது என்றார் அவர்.

அம்னோ சின்னத்தில் நிற்கப்போவதாக நேற்றி அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் அறிக்கை வெளியிட்டிருந்ததை அடுத்து, சுப்ரமணியம் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுஹாய்மி ஜூலை 2-ஆம் தேதி காலமானதை அடுத்து, சுங்கை கண்டிஸ் தொகுதி காலியானது. அதை அடுத்து அங்கு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker