Latestஇந்தியா

டிடி-க்கு ஏனிந்த திடீர் மாற்றம்! குழப்பத்தில் பலர்!

சென்னை, ஜூலை.12- பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்று அழைக்கப்படும் டிடி தற்போது டுவிட்டரில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

திருமணம்- விவாக ரத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதிலும் அதிகம் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் முன்பை விட அழகாகவும் மெருகுடனும் தெரிகிறார்.

இதனால் ரசிகர்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா? திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்ல, அவர் தற்போது தனது அழகின் மீது அதிக கவனம் செலுத்துவதனால் “ஓவர் மேக்கப்” என்றும் சிலர் கலாய்த்து உள்ளனர்.

அதே வேளை, சிலர் அது நடிகை சமந்தாவின் புகைப்படம் என்று அதிர்ச்சியாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து சிலர் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். ஒன்றை இழக்கும் தருவாயில் மற்றொன்றை மெருகூட்டுவதில் தவறொன்றுமில்லை என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker