Latestமலேசியா

நஜிப்பின் முன்னாள் உதவியாளர் தடுத்துவைப்பு

புத்ராஜெயா, ஜூலை.12 – சரவாக்கில் உள்ள பள்ளியில் சூரிய சக்தி ஈர்ப்பு தகடு பொருத்தும் பணத்தை மோசடி செய்த வழக்கு விசாரணை தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் முன்னாள் சிறப்பு உதவியாளர் ஒருவர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

42 வயதுடைய அவர் கடந்த செவ்வாய் முதல் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை இயக்குனர் டத்தோ சிமி அப்துல் கானி கூறினார்.

“சரவாக்கில் உள்ள ஒரு பள்ளியில் சூரிய சக்தி ஈர்ப்பு தகடு பொருத்துவதற்காக ஒரு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட அந்த உதவியாளர் கடந்த திங்கட்கிழமை எம்.ஏ.சி.சி.க்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்,” என அவர் தெரிவித்தார்.

அதோடு, அந்த முன்னாள் சிறப்பு உதவியாளர் பிந்துலுவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒரு பெரிய தொகையை கேட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் சரவாக்கில் உள்ள 369 பள்ளிகளில் சூரிய சக்தி ஈர்ப்பு தகடு பொருத்துவது தொடர்பாக 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திட்டத்தில் கையெழுத்திட்டார் என Sarawak Report எனும் இணையதள செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker