Latestஇந்தியா

பிரபல போலிவுட் கதாசிரியர் தற்கொலை

மும்பை, ஜூலை.12- பிரபல போலிவுட் கதாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நடந்துள்ளது.

“அப் தக் சாப்பான்” படத்தின் கதாசிரியரான ரவிசங்கர் அலோக் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நானா படேகரின் படத்திற்கு பினனர் பல போலிவுட் படங்களில் கதாசிரியராக பணி புரிந்தவர் ரவிசங்கர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அதற்கான சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

நேற்று மும்பை அந்தேரியில், குடும்பத்திலுள்ள அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் மதியம் இரண்டு மணியளவில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார் ரவிசங்கர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker