Latestஉலகம்

பேஸ்புக் அதிபரை மிஞ்சிய இளம் நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை.12- சினிமா நடிகைகள் கோடிகளில் புரள்வார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் சம்பள விஷயத்தில் இன்னும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத் தான் செய்கின்றன.

இந்நிலையில் கெலி ஜெனர் என்ற இளம் நடிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஈட்டிய வருமானம் 100 மில்லியன் டாலராகும். 20 வயதான இவர், சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

நடிப்பிற்கு வந்து 3 வருடங்கள் மட்டும் தான் ஆகின்றன. ஆனால் இந்த மூன்று வருடத்தில் அவர் சம்பாதித்தது 900 மில்லியன் டாலராகும். உலகின் பணக்காரர் பட்டியலை வெளியிடும் பிரபல போர்ப்ஸ் பத்திரிகையின் முன் அட்டை படத்தில் கெலி ஜெனர் படத்தை வெளியிட்டு பெண் பில்லியனர் எனக் குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக் அதிபர் மார்க் ஷக்கெர் பெர்க் 23 வயதில் செய்த சாதனையை பின்னுக்கு தள்ளிய நடிகை கெலி ஜெனர் தனது 20 வயதில் அதிகம் சம்பாதித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker