Latestஉலகம்

மகளின் கண் முன் மனைவியை கொன்ற நபருக்கு 10 ஆண்டுச் சிறை!

இஷூன், ஜூலை.12- தனது தாயாரின் அறையிலிருந்து அலறல் சத்தம் வந்ததைக் கேட்டு பதறியடித்துச் சென்ற 10 வயது சிறுமி, தனது தந்தை, தன் தாயாரை வெறித்தனமாக தொடர்ச்சியாக கத்தியால் குத்திக் கொலைச் செய்ததைக் கண்டு தாம் உறைந்து நின்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அச்சம்பவம் இன்று வரை தனது கண்களில் தெளிவாக தெரிவதாகவும், இதனால் தம்மால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் அச்சிறுமி உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

“இரவு நேரங்களில் என் கண்களுக்கு கத்தியும், கத்தியின் நிழல்களும் தெரிகின்றன. அச்சம்பவத்தை மறக்க நினைத்தாலும் என்னால் முடியவில்லை. இரவு நேரங்களில் திடீரென்று விழித்துக் கொள்வேன். அதன் பின்னர் நான் அழத் தொடங்கி விடுவேன்” என்று அச்சிறுமி கூறினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 13-ஆம் தேதியன்று, இஷூன் ரிங் ரோட் என்ற பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டிட வீடொன்றில், தன்னை விட்டுப் பிரிந்துச் சென்ற தனது மனைவி ஶ்ரீ இடாயு கஸாலி (வயது 29) என்பவரை, முகமட் ஜோனிட் அட்னான் (வயது 38) என்ற ஆடவர், 30 முறை கத்தியால் குத்தி கொலைச் செய்தார்.

பெரும் மன தளர்ச்சிக்கு ஆளாகிய காலக் கட்டத்தில், முகமட் ஜோனிட் அந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டது. தன்னால் சரிவர முடிவுகளை எடுக்க முடியாத தருணத்தில் தாம் அந்தக் கொலையைச் செய்ததாக, ஜோனிட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 10 ஆன்டுச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட அந்தத் தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அவ்விருவரின் இல்லற வாழ்க்கையில் அமைதியில்லாமல் இருந்தது.

ஜோனிட்டிற்கு நிலையான வேலையில்லை. அதுமட்டுமல்லாது, அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அதன் வாயிலாக அவருக்கு ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிருப்தி அடைந்த ஶ்ரீ  இடாயு, கடந்த 2016-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் விவாகரத்து கோரினார். அதே ஆண்டு ஜூலை மாதம், தங்களின் வீட்டிலிருந்து வெளியேறிய கணவரால் தமக்கு ஆபத்து நேரும் என்று கூறி, தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும் என்று ஶ்ரீ இடாயு நீதிமன்றத்தில் விண்ணப்பிருந்தார்.

Agnisugu • 1 min
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker