Latestமலேசியா

மலாய் மொழியில் டோம்மி உரை: பெரும் வரவேற்பு!

கோலாலம்பூர், ஜூலை.12 – அட்டர்னி ஜெனரல் டோம்மி தோமஸ் மலாய் மொழியில் சரளமாக உரைநிகழ்த்தும்  ஒரு காணொளி இளையதளங்களில் பரவலாகி வருகிறது.

டோம்மி தோமஸ் அட்டர்னி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரின் மலாய் மொழிப் புலமை குறித்து சிலர் விமர்சித்து பிரச்சினை எழுப்பினர்.

ஆனால்,  அந்தக் காணொளியில், மலாய் மொழியில் தயாரிக்கப்பட்ட உரையாற்றிய பின்னர் அவருக்குபெரும் கைதட்டல் கிடைத்தது. அந்தக் கைத்தட்டல், அக்கூட்டத்தில் இருந்தவர்களின் மனங்களை அவர் வென்று விட்டார் என்பதோடு. தமக்கு எதிரான விமர்சனத்தைத் தகர்த்து எறிந்தது போலவும்  அமைந்திருந்தது.

புத்ராஜெயாவில் நடைபெற்ற நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றி இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker