Latestவிளையாட்டு

மெஸ்ஸியை விட ரொனால்டோவை பிடிக்குமா? மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்!

மாஸ்கோ, ஜூலை.12- பிரபல கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரில் யாரைப் பிடிக்கும் என்கிற பிரச்னை முற்றியதால், கணவர் ஒருவர் கடைசியில் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸை அனுப்பினார்.

இந்த இருவரில் சிறந்த கால்பந்து வீரர் யார் என்பது குறித்து அவ்விரு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிகழ்ந்து வருகிறது.

“யார் சிறப்பாக கால்பந்தை காலில் வைத்துக் கொண்டு லாவகமாக ஓட்டம் எடுப்பார்? யாரின் முடி அலங்காரம் அழகாக உள்ளது? யாருக்கு அதிக திறமை உள்ளது” என்று அவ்விருவரின் ரசிகர்கள் தொடர்ந்து போட்டிப் போட்டு வருகின்றனர்.

அவ்விரு கால்பந்து வீரர்களுக்கும் தனித்துவம் உண்டு. இருவரும் பாலோன் டி’யோர் எனப்படும் கால்பந்தின் மிக உயர்ந்த விருதை தலா ஐந்து முறைகள் வென்றிருக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க, ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதியர், ரொனால்டோவா, மெஸ்ஸியா என்ற மோதல் முற்றியதால் விவகாரத்து பெறவுள்ளனர். ஆர்சென் -லூட்மியா என்ற அத்தம்பதிகள், மெஸ்ஸியா, ரொனால்டோவா? என்ற போட்டியால் பலமுறை சண்டைப் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சென் என்ற அந்த ஆண், மெஸ்ஸியின் தீவிர ரசிகர். லூட்மியாவிற்கு ரொனால்டோ மீது கொள்ளைப் பிரியம். உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போது, குரூப் டி-இல் விளையாடிய நைஜீரியாவை அர்ஜெண்டினா வீழ்த்திய நாள் முதல் கொண்டு, அவ்விருவருக்கும் மத்தியில் பிரச்சனைகள் எழுந்தன.

மெஸ்ஸியின் அபார ஆட்டத்தைக் கண்டு ஆரவாரமாக ஆர்சென் கொண்டாடியதைக் கண்ட லூட்மியா, மெஸ்ஸிக்கு ஒழுங்காக கால்பந்து விளையாடத் தெரியவில்லை என்று கூறி கிண்டலடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஐஸ்லாந்துவிற்கு எதிரான பெனால்டி கோலை மெஸ்ஸி ‘மிஸ்’ பண்ணிய போது, லூட்மியா, அதனைக் கேலிச் செய்தார். ஒருமுறை அல்ல. பலமுறை. அவர் வேண்டுமென்றே மெஸ்ஸியை அவமானப் படுத்துவதை தம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறார் ஆர்சென்.

“எப்போது பார்த்தாலும் மெஸ்ஸியை குறைத்து மதிப்பீடு செய்து வந்தார். என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது. அதனால், என் உடமைகளை எடுத்துக் கொண்டு நான் வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன்” என்று ஆர்சென் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வெளியேறிய மறுநாள், செல்யாபின்ஸ்க் என்ற நகரத்திலுள்ள நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி ஆர்சென் விண்ணப்பம் செய்தார். தற்போது அவரது வழக்கு மனு விசாரணையில் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker