Latestமலேசியா

மொகிடினுக்கு அறுவை சிகிச்சை

கோலாலம்பூர், ஜூலை.12- அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் இன்றிலிருந்து விடுமுறைக்குச் செல்வதால், அவரது பொறுப்புகளை தற்காலிகமாக பிரதமர் துன் மகாதீர் பார்த்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொகிடினுக்கு கணையத்தில் கட்டி வளர்ந்திருந்தது. அது, ஓர் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட நிலையில் அவர் மருத்துவ விடுமுறைக்குச் செல்கிறார் என அவரது பத்திரிக்கைச் செயலாளர் ஹாபிஸ் அப்துல் ஹலிம் தெரிவித்தார். இன்னும் மாதத்தில் மொகிடின் திரும்ப பணியைத் தொடங்குவார்.

அதுவரை, உள்துறை பொறுப்புகளை மகாதீர் கவனித்துக் கொள்ளவிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker