Latestமலேசியா

வடிவேலு பாணியில் விபத்து நாடகம்: அம்பலமானதால் ஆசாமி நழுவினார்!

கோலாலம்பூர், ஜூலை. 12- சினிமாவில் தான் காரால் மோதப் பட்டது போல் நாடகமாடி வடிவேலு பணம் பறிப்பார். அதேப் போன்ற நாடகத்தை பெட்டாலிங் ஜெயாவில் அரங்கேற்ற ‘பேறு குறைந்த ஆடவர்’ ஒருவர் முயற்சித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா எஸ்.எஸ்.2 என்ற பகுதியின் சாலையின் எதிர்புறம் மின்சார ஸ்கூட்டரில் பயணித்து வந்த அந்த ‘பேறு குறைந்த ஆடவர்’ தனது காரில் வேண்டுமென்று மோதி, கீழே விழுந்து நாடகமாடினார் என்று இங் ஜென் ஹாவ் என்ற ஆடவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“அவர் என் காரை மோதுவதற்கு முன்னர் நான் ‘ப்ரேக்’ போட்டு என் காரை நிறுத்தி விட்டேன். நான் காரை நிறுத்திய பின்னர், அந்த ஆடவர், என் காரில் மோதி, எழுந்து நின்று, பின்னர் கீழே விழுந்தார்.

“எனது காரின் முன்புறம் ‘டெஷ் கேம்’ காமிரா பொருத்தப் பட்டுள்ளது என்று நான் அவரிடம் கூறினேன் (அதில் உண்மையில்லை). உடனே சுதாரித்துக் கொண்டு, அந்த மின்சார ஸ்கூட்டரில் அமர்ந்த அவர், தான் பேறு குறைந்தவர் என்று என்னிடம் கூறினார்” என்று இங் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

சாலையில் படுத்துக் கொண்டிருந்த அந்த ஆடவரை ‘எழச்’ செய்வதற்காகவே தனது காரில் டேஷ்கேம் காமிரா பொருத்தப் பட்டுள்ளதாக தாம் பொய் சொன்னதாக இங் மேலும் தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்து தாம் போலீஸ் புகார் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இதேப் போன்ற சம்பவங்கள் சீனாவில் சில ஏமாற்று பேர்வழிகளால் அரங்கேற்றப் பட்டுள்ளன. வேண்டுமென்றே கார்களில் மோதி கீழே விழுந்து, வாகனமோட்டிகளிடம் இருந்து அந்தக் கும்பல்கள் அதிகமான தொகையை நஷ்ட ஈடாக பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker