Latestமலேசியா

ஸாகிர் நாய்க் விவகாரம் அமைச்சரவையில் பேசப்பட்டது

கோலாலம்பூர், ஜூலை.13- இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஸாகிர் நாய்க் குறித்து நேற்றைய அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டதாக தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ஸாகிர் நாய்க்கை திருப்பி அனுப்புவதற்கான காரணத்தை இந்திய அரசாங்கம் சட்டப்பூர்வமாகத் தெளிவாக எடுத்துரைக்குமாயின், மலேசிய அரசாங்கம் அதற்கு மதிப்பளிக்கும் எனவும் அவர் கூறினார். இதுவரை ஸாகிர் மீது வழக்கு இருப்பதாக மட்டும்தான் இந்திய அரசு தெரிவித்திருக்கிறதே தவிர விரிவான விளக்கத்தை தெரியப்படுத்தவில்லை என்றார் அவர்.

தெளிவுரை அளிக்கப்பட்டால், ஸாகிரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று கண்டிப்பாக பரிசீலுக்கும் என தெரிகிறது.

இதனிடையே, ஸாகிருக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது பற்றி கேட்டபோது, அது குறித்து கருதுரைக்க கோபிந்த் சிங் மறுத்து விட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker