Latestமலேசியா

ஸ்டார்வார்ஸ் “மாஸ்டர் யோதா” மாதிரிதான் துன் மகாதீர் – கல்வி அமைச்சர்

புத்ராஜெயா, ஜூலை.12- பிரதமர் மகாதீரின் 93 வயதை வைத்து அவரை எடை போடக் கூடாது. இந்த வயதிலும் நாட்டில் செயற்கரிய செயல்களைச் செய்யும் ஆற்றலைக் கொண்ட துன் மகாதீர், ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தில் வரும் மாஸ்டர் யோதாவின் கதாப்பாத்திரத்திற்கு ஒப்பனாவர் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.

பொதுவாக இந்த வயதில் உடலும் மனமும் சோர்ந்து பெரும்பாலான வயோதிகர்கள் மருத்துவமனையும் வீடுமாக அலைந்து கொண்டிருப்பார்கள். ஆனால், துன் மகாதீர் அப்படியல்ல. இளமை மாறாத துடிப்புடன் உற்சாகத்துடன் அவர் நாட்டை நிர்வகித்து வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். காலையில் நேரத்துக்கு அலுவலகத்திற்கு வந்துவிடும் பிரதமர், வேலை எல்லாவற்றையும் முடித்து தாமதமாகத்தான் வீடு திரும்புவார் என்றார் அவர்.

ஸ்டார்வார்சில் வரும் மாஸ்டர் யோடா கதாப்பாத்திரத்துக்கு வயது 900.

ஸ்டார்வார்ஸ் படத்தில் ஜெடாய் நைட்ஸ் (jedi knights) என்பவர்கள் பிரபஞ்சத்தின் அமைதியைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களுக்குள்ள சக்தியால் சாமானிய மனிதர்களால் செய்ய இயலாத காரியங்களை அவர்களால் செய்ய முடியும். அவர்களுக்கு மாஸ்டாராக இருப்பவர்தான் யோதா.

ஸ்டார்வார்சின் கதாப்பாத்திரங்களில் தனக்கு பிடித்த கதாப்பாத்திரம், ஜெடாய் கூட்டணியில் சேர்ந்து காலாக்திக்கின் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கும் லூக் ஸ்காய்வால்கர் எனும் கதாப்பாத்திரம் என்று கடந்தாண்டு துன் மகாதீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker