Latestஉலகம்

ஸ்ரீரெட்டியிடம் சிக்கிக் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்!

ஐதராபாத், ஜூலை.12- கோலிவுட் இயக்குனர் முருகதாஸை அடுத்து பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹோட்டலில் இருந்தார் என நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி இதுவரை தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டனர் என அவர்களின் பெயரை கூறி பரபரப்பாக ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது பேஸ்புக் பதிவில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீதும் அடுத்து இன்று நடிகர் ஸ்ரீகாந்த் மீது  பட்டாசு சரமாரியாக கொளுத்தியுள்ளார்.

அதில் முன்னர் சிசிஎல் கிரிக்கெட் போட்டி பார்ட்டியின் போது ஐதராபாத் பார்க் ஹோட்டல் அறையில் ஏதோ நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

கிளப்பில் நடனம் ஆடும் போது ‘எனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன்’ என கூறினீர்களே நினைவிருக்கிறதா? என அவர் ஸ்ரீகாந்த்திடம்  அவர் கேட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் சில விஷயங்களை ஶ்ரீரெட்டி விரைவில் அம்பலப்படுத்துவார் என்று தமிழ்ச் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker