Latestமலேசியா

30 மெகாபைட்ஸ் ‘UNIFI’ இணையச் சேவை : மாதம் 79 ரிங்கிட் – டெலிகோம்

கோலாலம்பூர், ஜூலை.12- மலேசிய டெலிகோம் நிறுவனத்தின் யுனிஃபை (UNIFI) எனப்படும் அதிவேக அகண்ட அலைவரிசையின் 30 மெகாபைட்ஸ் வேகமுள்ள அடிப்படை இணைய சேவை, மாதத்திற்கு 79 ரிங்கிட்டுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காயிரத்து 500 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் பெறும் மக்கள் அதாவது குறந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு இது ஒரு நற்செய்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 15-ஆம் தேதி முதல் மக்கள் இந்த இணையச் சேவைக்கு விண்ணப்பிக்கலாம் என டெலிகோம் குழும இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ பஸ்லான் ஒஸ்மான் தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதிக்குள் அகண்ட அலைவரிசை சேவையின் கட்டணத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு ஏற்ப, டெலிகோம் இந்த குறைந்த விலைச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker