Latestமலேசியா

அமைச்சரை எதிர்த்து டாக்சி ஓட்டுநர்கள் மறியலா?

கோலாலம்பூர், ஜூலை.13- கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்த பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நாடாளுமன்றம் அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறது. அன்றைய தினத்தன்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு எதிராக டாக்சி ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபடுவர்.

போக்குவரத்து அமைச்சரால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள e-hailing சேவைகளுக்கான புதிய விதிமுறைகளை எதிர்க்கும் வகையில் டாக்சி ஓட்டுநர்கள் அந்த மறியலில் ஈடுபடவிருப்பதாக பெர்சீம் எனப்படும் மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் உருமாற்ற சங்கம் அறிவித்துள்ளது.

“தேசிய முன்னணி அரசாங்கத்தைப் போன்றே, பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சரான அந்தோணி லோக் செயல்படுகிறார். அவரின் செயலுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்பதை உணர்த்த இந்த மறியலில் நாங்கள் ஈடுபடவுள்ளோம்” என்று பெர்சீம் சங்கத்தின் துணைத் தலைவர் கமாருடின் முகமட் ஹுசேன் கூறினார்.

வாகனச் சேவைகள், மற்றும் பொதுச் சேவை வாகன உரிமங்களுக்கான தேவைகளும் டாக்சி ஓட்டுநர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள விதிமுறைகள் போன்றே, e-hailing சேவைகளை வழங்குவோருக்கு விதிக்கப் படும் என்று அந்தோணி கடந்த புதன்கிழமையன்று அறிவித்தார்.

டாக்சி ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறித்த அக்கறையில்லாமல், தேசிய முன்னணி அரசாங்கத்தைப் போன்றே, இதர வாகன சேவைகளுக்கு அந்தோணி முன்னுரிமை வழங்குகிறார் என்று கமாருடின் சொன்னார்.

“டாக்சி ஓட்டுநர்களின் பிரதிநிதிகளிடம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல், நில பொது போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு லோக் அம்முடிவை எடுத்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker