Latestமலேசியா

ஆடவர் மீது பெட்ரோலை ஊற்றி மரணம்: தூக்கிலிருந்து தப்பிய பெண்!

ஜோர்ஜ் டவுன், ஜூலை.13- வங்காளதேசத்து ஆடவர் மீது பெட்ரோலை வாரி அடித்து, அந்தப் பெட்ரோல் தீப்பிடித்து அந்த ஆடவர் எரிந்து மரணமடைந்தது தொடர்பில் கைதாகிய இந்தோனிசியப் பெண், தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.

முதலில் அந்த ஆடவரை கொலைச் செய்ததாக பாத்தீமா மொஜ்டாரேல் (வயது 39) மீது குற்றஞ்சாட்டப் பட்டது. அதன் பின்னர், குற்றவியல் சட்டத்தின் 304-ஆவது பிரிவின் கீழ், ஒருவருக்கு மரணம் விளைவிக்கும் நோக்கத்தில் அந்தப் பாதகமான செயலைச் செய்ததாக பாத்தீமா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப் பட்ட பாத்தீமா, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஆணையர் டத்தோ அகமட் ஷாரீர் முகமட் சாலே தீர்ப்பளித்தார்.

பாத்தீமா மீது முதலில் சுமத்தப் பட்ட கொலைக் குற்றச்சாட்டு நிரூபனமாகி இருந்தால், அவருக்குக் கட்டாய தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதியன்று, காலை 7.50 மணிக்கு, புக்கிட் மெர்தாஜாமிலுள்ள ஜாலான் பெர்ஜாயா இண்டா என்ற பகுதியில், பாத்தீமா அக்குற்றத்தைச் செய்தார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.செல்வராணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ராஜூ என்ற வங்காளதேசத்து ஆடவர் மீது, பாத்தீமா பெட்ரோலை வாரி அடித்தார். அந்தப் பெட்ரோல் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டதால், ராஜு பரிதாபமாக மரணமடைந்தார்.

தனது குற்றத்தை பாத்தீமா ஒப்புக் கொண்டுதால், அவருக்கு குறைந்தப் பட்ச தண்டனை விதிக்கப் பட வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் எஸ்.செல்வி கேட்டுக் கொண்டார்.  விவாகரத்து செய்துக் கொண்ட பாத்தீமாவிற்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்றும், அவர் நீரிழிவு நோயால் அவதியுறுகிறார் என்றும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker