Latestமலேசியா

ஜி.எஸ்.டி இல்லாமல், 30% உணவகங்களில் உணவு விலை அதிகரிப்பு!

கோலாலம்பூர், ஜூலை.13- கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து, ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரி அகற்றப்பட்ட போதிலும், 30 விழுக்காடு இந்திய முஸ்லீம் உணவகங்கள், தங்களின் உணவு விலைகளை அதிகரித்துள்ளன என்று உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ சைஃபுடின் நேசூஷன் கூறினார்.

ஜி.எஸ்.டி அகற்றப் படுவதற்கு முந்தைய விலைகளையும், அகற்றிய பின்னர் விற்கப்படும் உணவுகளின் விலையையும் ஒப்பிட்டு பார்த்ததன் வாயிலாக இது தெரிய வந்துள்ளது என்று அவர் விவரித்தார்.

“30 விழுக்காடு இந்திய முஸ்லீம்கள் உணவகங்கள், தங்களின் உணவுகளின் விலைகளை அதிகரித்துள்ளன. ஜி.எஸ்.டி அகற்றப் பட்டதைத் தொடர்ந்து, 70 விழுக்காடு இந்திய முஸ்லீம் உணவகங்கள், உணவுகளின் விலையை குறைத்துள்ளன” என்று அவர் சொன்னார்.

“உணவு விலைகளை குறைக்காத உணவகங்களை கண்டறியும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்று சைஃபுடின் தெரிவித்தார்.
இதனிடையில், உணவு விரய எதிர்ப்பு கொள்கையை அமல்படுத்துவது தொடர்பில் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர்கள் விவகார அமைச்சு திட்டக்குறிப்பு ஒன்றை தயார் படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker