Latestமலேசியா

போர்ஹான் டோல்லா : புதிய பொதுப்பணித் துறைத் தலைமை இயக்குநர்

கோலாலம்பூர், ஜூலை.13- டத்தோ போர்ஹான் டோல்லா பொதுப் பணித் துறையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டான்ஶ்ரீ சைனால் ரஹிம் செமானின் ஒப்பந்தம் முடிவடைந்ததால், அவருக்கு பதிலாக போர்ஹான் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா தெரிவித்தார்.

போர்ஹான் இதற்கு முன் நகர்ப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஆவார். அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப் பணியில் சேவையாற்றி வருகிறார்.

59 வயதாகும் போர்ஹான், மலாயாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையிலும், அமெரிக்கா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.

அவர், பிரதமர் துறையில், நிதி, மேம்பாட்டு துணைத் தலைமைச் செயலாளராகவும், சபா கூட்டரசு செயலாளராகவும் கூட பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker