Latestமலேசியா

போலீசை கத்தியால் தாக்க வந்த ஆடவனுக்குத் துப்பாக்கிச் சூடு

சபா பெர்னாம், ஜூலை.13 – ஜாலான் பான்சாங் அருகே பாதுகாப்புப் படை உறுப்பினர்களைத் தாக்க முயன்ற ஆடவரை போலீசார் சுட்டதில் அவ்வாடவனுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2.45 மணி அளவில் நடந்த அச்சம்பவத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்களைக் கண்டவுடன் போலீசாரால் தேடப்பட்டு வந்த 37 வயது ஆடவன் தப்பித்துச் செல்ல முயன்றதாக சபா பெர்னாம் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அஸ்மி கூறினார்.

“பாதுகாப்புப் படை உறுப்பினர்களைக் கண்டவுடன் பதட்டமடைந்த அவ்வாடவனைத் 500 மீட்டர் தூராம் துரத்திச் செல்ல வேண்டியதாயிற்று. பின்னர் 25 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியைக் கொண்டு அந்த ஆடவன் போலீசைத் தாக்க முயன்றான்,” என நோர் அஸ்மி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து எச்சரிக்கை விடும் நோக்கில் போலீசார் வானில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்ட பின்பும் அவ்வாடவன் தாக்குதலை நிறுத்தவில்லை.

ஆகையால், தற்காத்துக் கொள்ளும் விதமாக போலீசார் ஆடவரை நோக்கி ஒரு முறை சுட்ட பின்னர் அவனைக் கைது செய்தனர். போதைப் பொருளுக்கு அடிமையான அந்த ஆடவன் மீது ஐந்து குற்றப்பதிவுகள் உள்ளன. போலீசார் இவ்வழக்கை குற்றவியல் சட்டப் பிரிவு 307 இன் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker