Latestமலேசியா

மாணவி மீது காலணி வீசிய ஆசிரியர்!

ஜோர்ஜ் டவுன், ஜூலை.13 – சுங்கை பினாங்கைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது எட்டு வயது மகளை பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறாக நடத்தி அவமானப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தமது மகள் தம்மிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் செய்ததைக் கூறியதை அடுத்தே புகார் அளிப்பதாக மாணவியின் தாயார் 37 வயது பட்சிலா அப்துல் ரஹீம் கூறினார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அச்சிறுமி இரவு 7 மணி அளவில் தனது வயிறும் முதுகும் கடுமையாக வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். என்ன நடந்ததென அவளின் தாய் கேட்டப் பின்னர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இதர பள்ளி மாணவர்களுக்கு முன் தன்னை அடித்து, தன் மீது காலணியையும் வீசியதோடு, பள்ளி சீருடையின் மீதும் தண்ணீர் ஊற்றியதாகவும் அச்சிறுமி கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்ததோடு தனது மகளுக்கு காயங்கள் ஏற்பட்டதற்கான புகைப்படங்களையும் வழங்கினார்.மேலும், தம் மகள் பயத்தில் பள்ளிக்குச் செல்ல மறுப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொடுக்கப்பட்ட போலீஸ் புகார் குறித்து தன்னைச் சந்திக்குமாறு பினாங்கு மாநில கல்வி செயற்குழுவின் தலைவர் டாக்டர் பி.இராமசாமி அச்சிறுமியின் தாயான பட்சிலாவை வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker