Latestஉலகம்

மூவாயிரம் ஆண்டைத் தாண்டிய அமரக் காதல்! -நெஞ்சை நெகிழ வைக்கிறது

கீவ், ஜூலை. 13-தனது கணவனின் மேல் உள்ள பிரியத்தால் அவன் இறந்த பின்னும் அவனோடு வாழ முடிவெடுத்த மனைவி தான் உயிரோடு இருக்கும் போதே கணவனின் உடலோடு தன் உடலை  புதைத்து கொண்ட நிகழ்வொன்று உக்ரைனில் நடந்திருக்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெர்-நோபில் மேற்கு உக்ரெனின் நகரத்தில் அருகில் இரண்டு உடல்கள் சமாதியான நிலையில் வெறும் எலும்பு கூடுகளாக கிடைத்துள்ளன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அந்த எலும்புக்கூடுகள் இருந்த நிலை ஆராய்ச்சியாளர்களை அதிசயப்பட வைத்தது.  கணவன் உடல் அருகே மிகுந்த காதலோடு அவனது கழுத்தின் தோளை பின்புறமாக கைகள் நுழைத்து தோளை அணைந்தபடி அவனது நெற்றியோடு தனது நெற்றியை வைத்து நேர்பார்வை பார்த்தபடி அந்தப் பெண் இறந்த போயிருக்கிறார்.

எலும்புகளின் படுத்திருந்த வடிவத்தை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  இவ்வாறு கூறுகிறார்கள். பண்டைய உக்ரைன் கலாசாரம் மிக மென்மையானது.  அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கலாசாரம் “வைசாஸ்கியா”அல்லது “விசக்கோ” என்று அழைக்கப்படுகிறது.

இந்த எலும்புக்  கூடுகளை ஆராய்ச்சி செய்த உக்ரைன் தொல்பொருளியல் நிறுவனத்தின் மீட்பு தொல்பொருள் துரைஅயைச் சேர்ந்த  டாக்டர் பெண்டிரிஸ்காய் கூறுகையில், இந்த எலும்புகளின் இருப்பை பார்க்கும் போது ஏற்கனவே இறந்த கணவனை பிரிய மனமில்லாத மனைவி அல்லது கணவனை தனியே வானுலகத்துக்கு அனுப்ப விரும்பாத மனைவி தனது சுய விருப்பத்துடன் இப்படிபட்ட நிலையில் இறந்திருக்கலாம் என்று கூறினார்.

இறக்கும் முன் வலியில்லாமல் இறப்பதற்கும் விஷம் குடித்து அந்த பெண் உயிரோடு சமாதி ஆகியிருக்கலாம் என்று தொல்லியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அவர்களின் புகைப்படத்தை பார்க்கும் போது இது சாத்தியம் என்று தான் தோன்றுகிறது. மேலும் பண்டைய கால உக்ரைன் மக்கள், காதல் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு அணுகினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

எத்தனையோ புகைப்படங்களில் வெளிப்படுகின்ற காதல்கள் நேர்மையற்று நீர்த்து போய் விடுகின்ற இந்த சம காலத்தில் இந்தக் காதல்களோடு ஒப்பிடுகையில், கணவனை அணைத்தபடி பத்திரமாக அவனது அருகாமையில் இறந்து போயிருக்கும் இந்த பெண்ணும் அந்த ஆணும் காலங்கள் தாண்டியும் இன்னும் காதலித்தப்படியே தான் இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker