Latestமலேசியா

இன, சமய அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல – ரபீடா அஸிஸ்

சிங்கப்பூர், ஜூலை.14- இன, சமய அடிப்படையிலான அரசியல் நாட்டின் வளச்சியைக் கெடுக்கும் என முன்னாள் அமைச்சர் டான்ஶ்ரீ ரபீடா அஸிஸ் நினைவுறுத்தினார்.
இதுவே நாடு சிறந்த அடைவுநிலையை அடையாமல் இருக்க முட்டுக் கட்டையாக இருக்கும் என அவர் கூறினார்.

 

தேவையற்ற விவகாரங்களை எல்லாம் அரசியலாக்கி மக்களிடையே பிளவையும், அதிருப்தியையும் ஏற்படுத்துவது நாட்டுக்குத்தான் பாதகத்தை ஏற்படுத்தும்.உதாரணமாக, கல்வியை அரசியலாக்குவது சரியே இல்லையென ரபீடா கூறினார்.

இவ்வேளையில், பக்காத்தான் அரசு, தனியார் சீன இடைநிலைப்பள்ளிகள் வழங்கும் ஐக்கிய தேர்வுச் சான்றிதழை (UEC) அங்கீகரிக்கும் என வாக்குறுதி அளித்ததை அடுத்து, அதனை எதிர்த்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ அஷ்ராப் வாஜ்டி பிரச்சனைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதை ரபீடா சுட்டிக்காட்டினார்.

அதே சமயம், முஸ்லிம் அல்லாதோர் முக்கிய பொறுப்புகளை வகிப்பதை பாஸ் கட்சி எதிர்த்து வருகிறது. குறிப்பாக, அட்டர்னி ஜெனரலாக டோம்மியையும், தலைமை நீதிபதியாக ரிச்சர்ட் மலான்ஜுமையும், சட்டத்துறைக்கான பிரதமர் துறை அமைச்சராஜ லியூவ் வுய் கியோங்கையும் நியமித்துள்ளது, நாட்டின் இஸ்லாமிய சட்டத்துக்கு பாதகமானதென அக்கட்சி முதிர்ச்சியில்லா கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

இத்தகைய இனவாத, சமயவாத அரசியல் நிலைபாடுகள் நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் சீரழிவைக் கொண்டு வரக்கூடியவை என ரபீடா எச்சரித்தார்.

 

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker