Latestஉலகம்

இரட்டைக் குழந்தைகளை கூண்டில் அடைப்பதா?  பெற்றோர்கள் கைது

ரியோ டி ஜெனிரோ, ஜூலை.14- பிரேசிலில் ஒரு வீட்டில் மூன்று வயதுள்ள இரட்டைக் குழந்தைகளை மரக்கூண்டில் அடைத்து வைத்திருந்ததைக் கண்ட ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் அந்தப் பெற்றோர்களை விசாரித்தபோது அவர்கள் கூறிய பதிலைக் கேட்டால் கோபம் வாராதவர்களுக்கும் கூட கோபம் வரும்.
எப்ரெர்சின்டியா எனும் இடத்தில் வசிக்கும் அந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் அப்படி தான் அடைத்து வைப்பது வழக்கம் என்று தெரிய வந்தது.

அவர்கள் வேலைக்கு போகும் போது குழந்தைகளை கூண்டுக்குள் அடைத்து விட்டு சென்று விடுவார்கள். கூண்டில் அடைக்கப்பட்ட குழந்தைகளின்
புகைப்படம் ஒன்றில் அந்தக் குழந்தைகள் கூண்டிலுள்ள இடைவெளி வழியாக பரிதாபமாக எட்டிப் பார்க்கும் காட்சியைக் காண முடிந்தது. இது பிரேசிலிய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரின் அந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளுர் அரசு காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். அந்தப் பெற்ரோர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கோபத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker