Latestமலேசியா

கோர விபத்து: சஸ்வின், கோபால கிருஷ்ணன், கவினேஸ், உள்பட நால்வர் மரணம்!

ஷா ஆலம். ஜூலை.14- இன்று அதிகாலை 1.14 மணியளவில் கட்டுப்பாட்டை மீறி சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 3 இந்திய இளைஞர்கள் உள்பட நால்வர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

பெர்சியாரான் செத்தியா அலாம் பகுதியில் நடந்த இந்தக் கோர விபத்தில் உயிர்நீத்தவர்கள் என். ஸெட் ஹெஷ்ரோன் (வயது 18), எம். சஸ்வின் (வயது 18), எம். கவினேஸ்சன் (வயது 19) மற்றும் கே. கோபாலகிருஷ்ணன் (வயது 20) என அடையாளம் கூறப்பட்டது.

இந்தக் காரை கோபாலகிருஷ்ணன் ஓட்டியதாக தெரிகிறது. இவர்கள் டைஹட்ஷூ செடான் காரில் டோல் சாவடியில் இருந்து ஜாலான் மேருவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்தத் துயரம் நடந்தது. மேலும் இந்தக் காரில் பயணம் செய்த 5ஆவது நபர் 19 வயதுடைய எம். ரோஷன் என்பவராவார்.

மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளான ரோஷன், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker