Latestசினிமா

தப்பான தொழிலுக்கு அழைப்பதா? சீரியல் நடிகை புகார்! இருவர் கைது!

சென்னை, ஜூலை.14- பிரபல சீரியல் நடிகையான ஜெயலெட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் பாலியல் தொழில் செய்தால் லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும் என ஒரு மெசெஷ் வந்ததைத் தொடர்ந்து அதில் சமபந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

எங்களுக்கும் குடும்பம் உள்ளது. 3 லட்சத்துக்கு அந்த மாதிரி தொழில் செய்ய அழைக்கிறார்கள். தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்காதீர்கள் என்று நடிகை ஜெயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயலெட்சுமி அளித்த புகாரில் கவியரசன் மற்றும் முருகப்பெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலெட்சுமி கூறியதாவது:- இவ்வளவு தைரியமாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை. நான் கொடுத்த புகாரின் பேரில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது. நடிப்பு என்பது எங்களுடைய தொழில் மட்டும் தான். சாதாரண மக்களைப் போல் எங்களுக்கும் போராட்டம் இருக்கிறது.

எல்லா நடிகைகளையும் ஒரே மாதிரியாக சிலர் பார்க்கின்றனர். எனவே நடிகைகளே இந்த பிரச்சனைகளுக்கு இனி அமைதியாக இருக்காதீர்கள். நமக்கு உதவி செய்ய போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். நடிப்பு என்பது நமக்குத் தொழில் என்பதை சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துவோம்.

எல்லா நடிகர்கள் – நடிகைகள் சொகுசாக வாழவில்லை. எனக்கு நடிப்பு மூலம் போதிய வருமானம் இல்லை என்பதால் காப்புறுதி முகவராக உள்ளேன்.
அதோடு ஜூனியர் அட்வகேட்டாகவும் பணியாற்றுகிறேன் என ஜெயலெட்சுமி கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker