Latestஉலகம்

தாய்-மகள் சென்ற கார் மீது விழுந்த 362 கிலோ பாறை! பரிதாப மரணம்!

வாஷிங்டன், ஜூலை.14- அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த தாய்- மற்றும் மகள் பரிதாபமாக இறந்த சம்பவத்தில் டிரக் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த கேரன் கிறிஸ்டியன்சென் கடந்த திங்கட்கிழமை மதிய வேளையில் மைன்சோதா சாலையில் தனது தோயோட்டா காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்து டிரக் லாரியிலிருந்து சுமார் 362 கிலோ எடை கொண்ட பாறை ஒன்று டிரக்கிலிருந்து நழுவி இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மெது விழுந்துள்ளது. இதனால் கார் நசுங்கியதால் காரின் உள்ளே இருந்த இருவரும் சம்பவம் நடந்த இடத்திலே பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரின் உள்ளே விழுந்த அந்த பாறையை அகற்றியுள்ளனர். டிரக்கில் இருந்து பாறை விழுந்துவிட்டது என்பதை அறிந்த டிரக் ஓட்டுனர் டிரக்கை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் இது தொடர்பாக போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்த போது டிரக் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது
இதையடுத்து போலீசார் தொடர் விசாரணையில் அந்த ஓட்டுனரை கைது செய்துள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker