Latestமலேசியா

மகளின் திருமணச் செலவை போலீஸ் படை ஏற்றதா? – மறுத்தார் ஐஜிபி

கோலாலம்பூர், ஜூலை.14- அண்மையில் நடைபெற்ற தனது மகளின் திருமணத்திற்கு அண்டை நாடுகளில் இருந்து வருகைப் புரிந்த உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் பயணச் செலவை போலீஸ் படை ஏற்றுக் கொண்டதாக ‘சராவாக் ரிப்போர்ட்’ வெளியிட்ட செய்தியை தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் மறுத்தார்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி இங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமணத்திற்கு புருணையில் இருந்து தனக்கு நெருங்கிய அதிகாரிகள் மட்டுமே கலந்துக் கொண்டனர் என அவர் கூறினார்.

அது தொடர்பாக எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அக்குற்றச்சாட்டை விசாரணை செய்ய விரும்பினால் அதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“நான் ஓய்வூதியம் பெறும் வயதை நெருங்குகிக் கொண்டிருக்கிறேன். எனது மகளின் திருமணச் செலவை ஏற்கும் அளவிற்கு எனக்குப் போதுமான சேமிப்பு உள்ளது. எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை,” என்று புஸி ஹருண் தெரிவித்தார்.

அதோடு, அரசாங்கம் அல்லது போலீஸ் படையின் பணமோ தனது மகளின் திருமணச் செலவிற்கும் விருந்தினர்களின் பயண செலவிற்கும் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ‘சராவாக் ரிப்போர்ட்’க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஐஜிபி சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker