Latestமலேசியா

மோட்டார் சைக்கிளில் ‘ஸ்வெட்டர்’ மாட்டியதால் கையிழந்த சிறுமி!

கோலத் திரங்கானு, ஜூலை.14- மாராங், கம்போங் பிஞ்சாய் போங்கொக் அருகே நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 7 வயது சிறுமி அணிந்திருந்த ஸ்வெட்டர் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதால் அச்சிறுமி தனது இடதுக் கையை இழந்தார்.

நேற்று இரவு 9.30 மணி அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது 7 வயது நோர் சுலாய்கா குமாய்ரா தனது 18 வயது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவள் குளிரைத் தவிர்க்க தன்னுடைய தாயின் ஸ்வெட்டரை அணிந்துள்ளார்.

அவளின் உருவத்திற்கு அந்த ஸ்வெட்டர் மிகப் பெரியதாக இருந்ததால் அது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அச்சிறுமி தனது இடதுக் கையை இழக்க நேர்ந்தது.

அவளின் தந்தையான சுல்கிப்லி முகமட், அவரது மூத்த மகளான நோர் சுலாய்காவின் எதிர்காலம் இருண்டு விட்டதால் தாம் நிலைகுலைந்து போய் விட்டதாக கூறினார்.

“அவளது கையில் ஏற்பட்ட ஆழமான காயங்களினால் அவளுக்கு செயற்கை கைக் கூட பொருத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என சுல்தானா நோர் சாஹிரா மருத்துவமனையில் இருந்த அச்சிறுமியின் தந்தை சொன்னார். மேலும், தற்போது உதவியற்ற நிலையில் இருப்பதால் இந்த விஷயத்தை கடவுளிடமே விட்டு விடுவதாகவும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker