Latestமலேசியா

வாய்ப் புண் நோய் – டெங்கி அதிகரிப்பு; பினாங்கு மக்கள் அவதி

ஜார்ஜ் டவுன், ஜூலை.14- பினாங்கில் ஒருபுறம் கை, கால் மற்றும் வாய்ப் புண் நோய் பரவி வரும் நிலையில், திடீரென டெங்கிக் காய்ச்சல் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இரட்டை பீதியில் உழலும் நிலை பினாங்கு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

கடந்த ஆண்டில் டெங்கிக் காய்ச்சல் எண்ணிக்கை 1,263 ஆக இருந்தது. ஆனால், இவ்வாண்டு அதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும் போது டெங்கிக் காய்ச்சல் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்து இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது.

எனினும் கடந்த ஆண்டில் டெங்கிக் காய்ச்சல் மரணம் 8 -ஆக இருந்தது. ஆனால், இவ்வாண்டில் அது 2 -ஆக இருக்கிறது என்று மாநில சுகாதாரத் துறை ஆட்சிக் குழுத் தலைவர் டாக்டர் அஃபிப் பஹாருடின் சொன்னார்.

டெங்கியைக் கட்டுப்படுத்துவதில் முன்தடுப்பு முயற்சிகளை மக்கள் கடைப் பிடித்து வர வேண்டும் என்றும் காய்ச்சல், உடம்பு வலி, வாந்தி, உடலில் அரிப்பு மற்றும் பசியின்மை ஆகியவை டெங்கிக்கான அறிகுறிகள் என்றும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker